வுட்சைட் சமூகவாரியான

கருத்துக் கணிப்பு.

வுட்சைட் சதுக்க அங்காடி உங்கள் சமூகத்தின் மத்தியில் உள்ளது. இது பொருட்களை வாங்கவும், வங்கி வேலைகளைச் செய்யவும், உணவு உண்ணவும் உள்ள ஓர் இடமாக இருப்பது மட்டுமன்றி, மக்கள் இயல்பாகக் கூடிக் குலவும் ஒரு ஸ்தலமாகவும் அமைந்து உள்ளது. இந்த அங்காடியை யாவரும் அணுகி உட்செல்லக் கூடியதாகவும் அனுபவித்து மகிழக் கூடியதாகவும் முன்னேற்றம் செய்வதற்கு நாம் எப்பொழுதும் முயன்று வருகிறோம். இப்பொழுது நாங்கள் இந்த அங்காடியிலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள நிலப் பகுதியிலும் நீங்கள் அடையும் சுக அனுபவத்தை மேலும் உயர்த்துவதற்கு எண்ணியுள்ளோம். புதிய ஓர் அபிவிருத்திக் கட்டிட அமைப்பினை இங்கு உருவாக்கி, அங்கு மக்கள் வாழுவதற்கும் பொருட்களை வாங்குவதற்கும், தொழில், விளையாடல் போன்றன செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து, மேலும் அதிக சமூக சேவைகளையும் வழங்குவதற்கு யோசித்து இருக்கிறோம். இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மிக ஆரம்ப நிலையாக உள்ள இச்சமயத்தில் உங்களைப் பற்றியும் நீங்கள் இந்த அங்காடியை எவ்வாறு பயன்படுத்தி அனுபவிக்கிறீர்கள் என்பது பற்றியும் பொருத்தமான தகவலினைப் பெறுவதற்கு நாம் விரும்புகிறோம்.

 

இங்குள்ள கருத்துக் கணிப்பு வழியாக எமக்குக் கிடைக்கும் தகவலின் உதவியுடன் நாங்கள் எமது அபிவிருத்தி எண்ணங்களை மேலும் முன்னெடுக்கவும், அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் சமூக ரீதியான கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கும் முடியும்.

 

நீங்கள் இக்கருத்துக் கணிப்பினைக் கணினி வழியாக நிரப்பி பூர்த்தி செய்யலாம் www.woodsidecentre.com/survey-tamil.

 

இக்கருத்துக் கணிப்பு அல்லது உருவாகும் சாத்தியம் கொண்ட புதிய அபிவிருத்தித் திட்டம் பற்றி மேலதிக தகவலினைப் பெறுவதற்கு, தயவு செய்து இங்கு சென்று பாருங்கள் www.woodsidecentre.com அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள் info@woodsidedevelopment.ca.

தகவல் தனித்துவம் பொறுப்புத் துறப்பு: இக்கருத்துக் கணிப்பும் அதன் முடிவுகளும் ரொறொன்ரோ நகராட்சியினர் (City of Toronto),  பூஸ்பீல்ட்ஸ் இங்க் (Bousfields Inc.) நிறுவனத்தினர் (நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சமூகத் தொடர்பாடல் நிறுவனம்) மற்றும் கட்டிடம் கட்டுபவர் (95 Development Inc.) ஆகியோர் மத்தியில் பரிமாறப்படலாம். இக்கருத்துக் கணிப்பில் உங்களுடைய பெயரோ அல்லது வேறு எந்த அடையாளம் காணக் கூடிய தகவலோ தரும்படி கேட்கப்பட மாட்டாது. நீங்கள் வழங்கும் தகவல் அந்தரங்கமான முறையில் வைத்துப் பேணப்படும்.